தனக்கு ஒரு பிரச்சனை என்றபோது அழுது, புரண்டு நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று சொன்ன ஒரு கோழை தான் கமலஹாசன் என்றும் அவர் திமுகவின் கைக்கூலி என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.

தமிழகத்தில் அனைத்துக் துறைகளிலும் ஊழல் பெருகிப் போய் விட்டதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார். இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கமலஹாசனுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர்.

கமலஹாசனை சில அமைச்சர்கள் ஒருமையில் திட்டினர். அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு படி மேலேபோய், கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

கமல் அதிமுகவை விமர்சனம் செய்ததற்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்தார்கள் சரி, ஆனால் கொஞ்சமூம் சம்பந்தம் இல்லாத பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், எச்,ராஜாவும் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து ஏன் என பொதுவாக கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இந்துமத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் எச் ராஜா, கமலஹாசன் ஒரு கோழை என கடுமையாக விமர்சனம் செய்தார்.

விஸ்வரூபம் பிரச்சனையில் கமலஹாசனுக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் அழுதார் , புரண்டார், நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்தார். எமவே அவர் கோழை, நாட்டைவிட்டு வெளியேற வேண்டியவர் என மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார்.

தற்போது முரசொலி பவளவிழாவில் கமலஹாசன் பங்கேற்றதன் மூலம், அவர் திமுகவின் கைக்கூலி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் எச்,ராஜா கூறினார்.