காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை தமிழக அரசு மத்திய அரசியடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது

ஆனால்காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. இதனை வலியுறுத்தி  நாடாளுமன்ற  அதிமுக  எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மிழகத்திலும் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்கனை நடத்தி வருகின்றனர். தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திமுக அவருக்கு கறுப்புக் கொடி போராட்டம்  நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கபபட்டுள்ளது.

இந்நிலையில் பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எர்.ராஜா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

அதே நேரத்தில் அணைகளை கட்டுப்படுத்தும் பொறுப்பை மாநில அரசு மத்திய அரசிடம் கொடுத்துவிட்டால் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என கூறினார.