பொய்களை பரப்புவதற்காக மீம்ஸ் போடுவதற்கு திமுகவினர் 200 ரூபாய் வழங்குவதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவையொட்டி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திர போராட்டம் நடந்தது. இதுதான் முதல் சுதந்திர போராட்டம் என கூறுகிறோம். ஆனால் இதற்கு முன்பே வீரன் அழகுமுத்து கோன் பிரிட்டஷ் அரசுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்டார்.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை, அழகு முத்து கோன் ஆகியோர் வரலாற்றுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரியும், தபால் தலை வெளியிட கோரியும் என்னிடம் வலியுறுத்தினார்கள்.தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா குவாட்டருக்கும் 200 ரூபாய், டுவிட்டருக்கும் 200 ரூபாய் என்ற டிரண்டை திமுக கடைப்பிடிப்பதாக எச்.ராஜா கிண்டல் அடித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டு சூழலை பாதளத்தில் தள்ளியது சீமான், வைகோ ஆகியோரே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.