அசுரன் திரைப்படமும் அபகரிப்போர் நாடகமும்... என்ற தலைப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில், ’’பஞ்சமி நிலம் குறித்து பேசும் அசுரன் படம் அல்ல. அது ஒரு பாடம் என்கிறாரே ஸ்டாலின்... பார்ரா... இயலாதோருக்கும், வாழ வழியில்லாதோருக்குமான சமூகக்கூடம் அமைப்பதாக சொல்லி அண்ணன், தம்பிகளிடம் அடிமாட்டு விலைக்கு அபகரிக்கப்பட்ட இடம்தான் அறிவாலயம். பஞ்சமி நிலமாக இருந்து பறிக்கப்பட்ட இருந்து பறிக்கப்பட்ட இடம்தான் இன்றைய முரசொலி கட்டடம்.

 அதுபோலவே மாநகராட்சி நிலத்தை வளைத்து மதுரையில் அழகிரி கட்டியதோ ஐடி பார்க், விளைநிலங்களுக்கு செல்லும் நீர்வழி பாதையை மறித்து மதில்சுவர் எழுப்பியதில் அவருடைய கல்லூரி. இவ்வளவு ஏங்க. திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த  நில ஆக்கிரமிப்புகளுக்காக கழகத்தின் ஆட்சியில்  உருவாக்கப்பட்டது தான் நில அபகரிப்பு மீட்பு பிரிவு பிரத்யேக காவல்துறை பிரிவே.

 

இப்படியான பெருமையும், பின்னணியும் கொண்ட திமுகவின் தலைவர் தன் மகளுக்காக வாங்கிய வேளச்சேரி வீட்டுக்கான உரிய பணத்தை தராமல் ஏமாற்றியபோது அன்று காவல்துறை உரிய பணத்தை தராமல் ஏமாற்றியபோது அன்று காவல்துறை ஆணையரிடம் அந்த விவகாரம் புகாராக சென்றதும் உடனே இரவோடு இரவாக ஏமாற்றிய பணத்தை உரியவருக்கு செட்டில் செய்வது வழக்கில் இருந்து இவர் தப்பித்த வரலாறு நாடறியும். 

இப்படியெல்லாம் பிறர் நிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அபகரிப்பு நடத்துவதுமான கைவண்ணங்களில் திளைத்த திமுகவின் தலைவர் படம், பாடம் என்றெல்லாம் படம் காட்டுவதை நினைத்து நாடு சிரிக்காதா என்ன? தங்கத்தை தரம் பார்த்துச் சொல்ல உறைகல்லுக்கு வேண்டுமானால் உரிமை உண்டு. அது துரு பிடித்த தகரத்திற்கு ஒரு நாளும் கிடையாதே’’ என விமர்சித்துள்ளது.