பத்தாண்டுகளுக்கு முன் தன்னை மூன்று வருடமாக காதலித்த சீமான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நடிகை விஜயலட்சுமி. 

இதற்கு ஆதாரமாக சீமான் தன்னுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயலட்சுமி. தற்போது சீமான் தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம் செய்த காட்சியை அறிந்து சீமான் பொய் திரையைக் கிழிக்கும் இடத்தில் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, ‘’நான் சிவபக்தி உடையவள் என்று தெரிந்தும் என்னை வாழ்த்துக்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கொடுமைப்படுத்தினார் சீமான்.

 இப்போது நல்லவன் மாதிரி வேஷம் போடுகிறார். நான் விபூதி பூசுவதை கேலி செய்த சீமான் இன்று தஞ்சையில் பட்டை அடித்து நாடகம் ஆடுகிறார்.  சீமான் உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா? வடிவேலு காமெடியை மிஞ்சிவிட்டது உங்கள் ட்ராமா. நீங்கள் சாமி தரிசனம் செய்த செய்த புகைப்படங்களை பார்க்கும்போது எப்படியெல்லாம் நடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் சாமி கோவில் ஒரு பாவியை கோவில் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். 

பெண்ணுக்கு துரோகம் செய்பவர்களை சிவனுக்கு பிடிக்காது. என்னுடைய சிவ வழிபாட்டை தடுக்க முயற்சித்த சீமான் ஒரு கிறிஸ்டியன். என்னை கூட கிறிஸ்தவராக மாற்றும் முயற்சியில் சீமான் ஈடுபட்டார்.

 

சிவனை திட்டி விட்டு இப்போது வேஷம் போடுவது அந்த சிவனுக்கே தெரியும். என்னை மட்டுமா? பல பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி அழவைத்துள்ளார். அந்தப்பெண்களின் கண்ணீர் உங்களை சும்மாவிடாது. சீமான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ளே காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து அவரது அழிவுகாலம் தொடங்கிவிட்டது. சிவன் உங்களை சும்மா விட மாட்டார்’’ என்று சீமானால் காதலித்து ஏமாற்றப்பட்ட நடிகை விஜயலட்சுமி சாபமிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.