Asianet News TamilAsianet News Tamil

முட்டை ரப்பராகுது... தக்காளி கல்லாகுது... பட்டினியோடு பரிதவிக்கும் ராணுவ வீரர்கள்..!

இந்திய எல்லையான சியாச்சினில் நிலவும் குளிரின் தன்மையையும், அதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதையும் இராணுவ வீரர்கள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

How jawans in Siachen battle minus 70 degree cold
Author
India, First Published Jun 10, 2019, 4:05 PM IST

இந்திய எல்லையான சியாச்சினில் நிலவும் குளிரின் தன்மையையும், அதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதையும் இராணுவ வீரர்கள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. How jawans in Siachen battle minus 70 degree cold

இமயமலையின் காரக்கோரா மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் உள்ளது சியாச்சின். உலகின் அதிக குளிர் நிறைந்த பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. சியாச்சினுக்கு அருகே பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் எப்போது பனி சரிவு ஏற்படும். எப்போது சரியான குளிர்நிலை நிலவும் என்பது சந்தேகமே.

 How jawans in Siachen battle minus 70 degree cold

எதிரிகளுடன் போராடுவதை காட்டிலும், குளிருடன் போராடுவதே பெரும் துயரமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் வீரர் ஒருவர், குளிர்பான பாக்கெட்டை கட் செய்யாமல், கத்தி கொண்டு வெட்டுகிறார். மற்றொருவர் ஒரு முட்டையை மற்றொரு முட்டையுடன் மோதியும், கீழே போட்டும் உடைக்க முற்படுகின்றனர். 

 

ஆனால், பந்தைப்போல மீண்டும் கைக்கு வந்துவிடுகிறது. அது மட்டுமின்றி தக்காளியினை சுத்தியால் உடைக்கின்றனர். இப்படி அனைத்து காய் கறிகளையும் சாப்பிட முடியாமல் படும் வேதனையை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நமது ராணுவத்தினர் அன்றாடம் வாழ்வில் சாப்பிடக்கூட முடியாமல் மைனஸ் 40 டிகிரி முதல் மைனஸ் 70 டிகிரிக்கும் குறைவான குளிர் நிலவி வருகிறது. இதனால் பட்டினியால் ராணுவ வீரர்கள் பறிதவிக்கும் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios