ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா தொடர்பாக  சுகாதாரத்துறை   அமைச்சர்  விஜயபாஸ்கர் ,சமத்துவ  மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், எம் ஜி ஆர்   பல்கலைக்கழக  துணை வேந்தர்   கீதா  லட்சுமி இவர்கள் 3 பேரின் வீட்டிலும்  அவர்களுக்கு  சொந்தமான  அலுவலகத்திலும்   ஒரே  நேரத்தில் வருமானவரித்துறையினர்  அதிரடியாக  சோதனை நடத்தினர் .

கீதா  லட்சுமிக்கும்  விஜய பாஸ்கருக்கும் இடையே  பல்வேறு   பண பரிமாற்றங்கள்   நடைபெற்று  உள்ளதாம் .

பொதுவாகவே  ஊழல்  நடப்பதில், மருத்துவத்துறையில்  அதிக ஊழல் நடைபெறுகிறது. அப்படி  எந்தெந்த ஊழல்  எப்படி   நடந்திருக்கிறது  என்பதை  பார்க்கலாம் .

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாத்திரைகள்  கொள்முதல் செய்தவதற்கு பெறப்படும் கமிஷன்

மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் பெரிய அளவில் பெறப்படும் லஞ்சம்

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தமிழக அரசு அறிவித்த தொகையை, அப்படியே  இன்சூரன்ஸ்  நிருவனங்களுக்கு கமிஷன் முறையில் பிரித்துக் கொண்டது

உடலுறுப்பு தானம் திட்டம்

ஒருவர் உடலிலிருந்து பெறப்படும் கண்கள், இதயம், கல்லீரல்  உள்ளிட்ட பல உறுப்புகள், தனியார் மருத்துவமனையானது  பல லட்ச கணக்கில் நோயாளிகளுக்கு விற்கிறது. இதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க ஒரு கமிஷன்

இது போன்று பட்டியல் நீள்கிறது. இதெல்லாம் அமைச்சர் விஜய பாஸ்கர் பற்றியது. அடுத்ததாக கீதா  லட்சுமி பற்றி பார்க்கலாம் .

சாதாரண  மருத்துவராக , சென்னை  ஸ்டான்லி  மருத்துவ  கல்லூரியில்  இருந்த  கீதா  லட்சுமி  மாணவர்களிடமிருந்து அப்போதே லஞ்சம் வாங்குவதை தொடங்கியுள்ளார். லஞ்சமாக  அவர் என்ன பெற்றார் தெரியுமா ?  நல்லி  சில்க்ஸ், ராஜ் மஹால்  ஜவுளிக்கடையில்  விற்கும்  பட்டுப்புடவைகள் தானாம் .

மாணவர்களுக்கு  வைவா நடத்தும் போது தேவையான மதிப்பெண்களை  போட்டு  பாஸ்  செய்து  வைப்பதற்காக  பெறப்பட்ட  லஞ்சம்  இன்று வரை  வேறு  வழியில்  நடைபெறுகிறது . எப்படி  என  கேட்கிறீர்களா ?

  ஸ்டான்லியில் இருந்த இவர், ஒரு அரசியல் பெரும்புள்ளியின் அறிமுகம் கிடைத்த பின்னர், அமைச்சர்  மூலம் மருத்துவக் கல்வி இயக்குநராக ஜம்ப் ஆகிட்டார்.

கீதா லட்சுமி என்னென்ன செய்தார் ?

ஒரு மருத்துவர் பணி மாற வேண்டுமென்றால், பத்து லட்சம் ரூபாய் வரை கமிஷன்

மருத்துவ துறையில், நடக்கும் பல்வேறு பணி நியமனத்தில் எல்லாமே பணம், பணம்தான் என்ற நிலை  உருவாகி உள்ளது.

கீதாலட்சுமி மருத்துவக்கல்லூரி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றதும் இனியாவது மருத்துவத்துறை நிம்மதியாக இருக்குமென்று நம்பி நிம்மதியடைந்த மற்றவர்களுக்கு பெரிய ஆப்பு காத்திருந்தது.   

அதாவது, அடுத்த பதவியாக மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கொடுத்தார்கள்.பின்னர் இங்கேயும், எம்.எஸ், எம்.டி படிக்கும் மாணவர்களுக்கு பாஸ் போட வேண்டுமென்று பிஜி படிக்கும் மாணவர்கள் சிலரிடம் இருபது லட்சம் ரூபாய்  வரை லஞ்சமாக வாங்கியுள்ளார்.

மேலும் முக்கிய இடத்தில் கையெழுத்திட,லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி மலை போல பணத்தை  குவிக்க தொடங்கிய இந்த தருணத்தில் தான் ஹீரோ என்டர் ஆகுறார். அதாங்க   வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினாங்க.

அதெல்லாம் சரி கீதா லட்சுமி விஜபாஸ்கருக்கு என்ன ஹெல்ப் பண்ணாங்க தெரியுமா ?

மருத்துவ துறையில் நடக்கும் ஊழல், லஞ்சம் மூலமாக பெறப்படும் எல்லா பணமும் கீதா லட்சுமி   மூலமாகத்தான் விஜய பாஸ்கருக்கு சென்றுள்ளது. லட்சுமி என்றாலே பணம் தான், அந்த லட்சுமி தான்  கீதாலட்சுமி மூலம் விஜயபாஸ்கருக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இவர் லஞ்சம் வாங்கி குவித்த பணத்தில் தான், நிலம், தங்கம், வெளிநாடுகளில் ஹோட்டல் என  அனைத்திலும் முதலீடு செய்துள்ளார்.

அதெல்லாம் சரி, இப்படியெல்லாம் லஞ்சம் வாங்கி தற்போது புகழின் உச்சிக்கு சென்று இருக்கும் கீதா லட்சுமிக்கு தான், அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு என்றால் பாருங்களேன்