5 மணிநேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார்? காவேரி மருத்துவமனை பரபரப்பு அறிக்கை.!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு ஜூன் 13ம் அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு!
இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 5 மணிநேரம் நீடித்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க;- அண்ணாமலை தமிழகத்தின் தலைவர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவின்? புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்..!
அதில், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சையில் அமைச்சருக்கு 4 பைபாஸ் கிராப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்பு தொடர்பான தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.