ஹெலிகாப்டர் விபத்து குறித்த விமானப்படையின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து அதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்கள் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விமானப்படையின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து அதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அல்லது அறிக்கை குறித்து விமானப்படையோ, அரசாங்கமோ இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் மோசமான வானிலை காரணமாக குறைந்த பார்வைத் திறனால் விபத்தாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானியின் தவறுதான் விபத்துக்கான அடிப்படைக் காரணமா? அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் மேகங்களுக்குள் செயல்படுவதற்கான விதிகள் புறக்கணிக்கப்பட்டதா? என்பது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் விளக்கமும் வெளியாகவில்லை.
டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான MI-17v5 ஹெலிகாப்டர் சீரற்ற காலநிலையால் திசைதிருப்பப்பட்டு தற்செயலாக விபத்து நடந்திருக்கலாம்’’ என்று நாட்டின் தலைசிறந்த ஹெலிகாப்டர் பைலட் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணைக்குழு தெரிவித்தது. தொழில்நுட்பப் பிழைகள் அல்லது இயந்திரக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. Mi-17V5 ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
விசாரணைக் குழுவிற்கு தற்போது விமானப்படையின் சட்டத் துறையின் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அறிக்கையை இறுதி செய்வதில், ஐந்து நாட்களுக்குள் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதரியிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைத் தளபதி ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ஜெனரலின் உயர்மட்ட உதவியாளர் பிரிகேடியர் எல்.எஸ். லிடர் உட்பட 10 ஆயுதப்படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 11 பேரும் உயிரிழந்தனர்.
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பேசுவதற்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த குரூப் கேப்டன் வருண் சிங், விபத்தில் உயிர் பிழைத்தார். ஆனால் பலத்த தீக்காயங்களுடன், பெங்களூருவில் உள்ள விமானப்படையின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சில நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நாளில் மொபைல் போன் வீடியோக்கள் - உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ மூலம் ஹெலிகாப்டர் விபத்துள்ளானது எப்படி என்கிற தகவல் வெளியாகின. அதில் மூடுபனிக்குள் ஹெலிகாப்டர் பறந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
