பொதுக்குழுவை கூட்ட பொது செயலாளரின் அனுமதி தேவை என்றும் அமைச்சர்கள் கூடி பொதுக்குழுவைக் கூட்ட அதிமுகவில் சட்டவிதி இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பொதுக்குழுவை கூட்ட பொது செயலாளர் அனுமதி தேவை என்றும் 12 ஆம் தேதி நடந்தது பொதுக்குழுவே அல்ல என்றும், அமைச்சர்கள் கூடி பொதுக்குழுவைக் கூட்ட அதிமுகவில் சட்டவிதி இல்லை என்றும் கூறினார்.

இரட்டை இலை சின்னம் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அமைச்சர்கள் அடிக்கடி கருத்தை மாற்றி பேசி வருகின்றனர் என்றும், அதனை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரையும் நீக்கியிருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது என்றார். எம்.ஜி.ஆரையே எதிர்த்து வெளியே செல்ல முயன்றவர் ஓ.எஸ். மணியன் என்று கூறினார்.

ஜெயலலிதா மறைந்தவுட ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் எந்த சலசலப்பும் இன்றி பதவியேற்றனர். 
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலா படத்தைப் போடாததற்கு நான் காரணமல்ல என்றும் அதற்கு நிர்வாகிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் நீதி விசாரணை நடத்தட்டும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.