மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கபட்ட நீட் தேர்வு உள் ஒதுக்கீடு விவகாரத்தில்  மக்களுக்கு அறிமுகமே இல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர் ( ஆளுநர்) எப்படி ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்துவது என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு மட்டுமே. 

இதனைக் கருத்தில் கொண்டு நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. இதனையடுத்து தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவு எடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்ட முன்வடிவை தமிழக அளினருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனாலு இதுவரை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதல் செய்து வருகிறார்.  ஆளுனரின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநர் இந்த சட்ட முன் வடிவுக்கு காலம் தாழ்த்தாது ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கபட்ட நீட் தேர்வு உள் ஒதுக்கீடு விவகாரத்தில்  மக்களுக்கு அறிமுகமே இல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர் (ஆளுநர்) எப்படி இச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்துவது என்பது அரசியல் சாசன விரோத போக்கு எனவும், இது முழுக்க முழுக்க பா.ஜ.கவோடு கைகோர்த்து கொண்டு ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் உள்ளதாகவும் திரு முருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் வருகின்ற நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறோம் என்ற அவர் அந்த தினத்தில் தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி அறிமுகபடத்தவுள்ளாத பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என்றார். இது தொடர்பாக சென்னை நிருபர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில். இந்த சந்திப்பில் கலி .பூங்குன்றன், திராவிடர் கழகம்,பொழிலன், தமிழக மக்கள் முன்னணி,திருமுருகன் காந்தி ,மே 17 இயக்கம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.