அப்பல்லோவில் சிகிச்சை படுக்கையில் ஜெயலலிதா  ஜூஸ் குடித்த வீடியோ! அமைச்சர் ஜெயக்குமாரை வம்புக்கிழுத்த ஆடியோ!  என்று தமிழக அரசியலை மட்டுமல்ல, தேசிய அரசியலையே தாறுமாறாக தெறிக்கவிட்டவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வி.ஐ.பி.யான வெற்றிவேல். 
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வரை அக்கட்சியில் கோலோச்சிவிட்டு பின் வெளியேறிய நாஞ்சில் சம்பத்தை தற்போது ஒரு ‘சென்சேஷனல்’ வீடியோ உரசிப் பார்க்கிறது. அதாவது ஒரு ஓட்டல் அறையில் ஒரு ஆணும், பெண்ணும் உற்சாக பானம், சைடு டிஷ் சகிதமாக கட்டிலில் அமர்ந்திருக்கின்றனர். பின் இருவரும் நெருங்கி கட்டிக் கொள்கின்றனர். 


இப்படியொரு வீடியோ மொபைல் மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பின் அந்த மொபைலில் அந்த வீடியோவை ஓடவிட்டு, அதை மற்றொரு வீடியோவில் ரெக்கார்டு பண்ணி பரப்பியிருக்கின்றனர். அப்படி பரவிய வீடியோவுக்கு ‘யோவ் நாஞ்சில்சம்பத்! நீ எவ்ளோ பெரிய பேச்சாளர், திராவிட அரசியல்வாதி, ஒரு பெரிய மனுஷன் பணற வேலையா இது?’ என்று டைட்டில் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். அதாவது அந்தா வீடியோவில் இருப்பது நாஞ்சில் சம்பத் என்று குறிப்பிட்டுள்ளனர். 


இந்த நிலையில் தன் இமேஜை உரசும் நித வீடியோவை பற்றி சில செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி தந்திருக்கும் நாஞ்சில் சம்பத் “அந்த வீடியோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எந்த விதமான தவறுகளுக்கும் என் வாழ்வில் இடமுமில்லை. என் மனசாட்சி க்ளியராக இருக்குது.” என்றார். 
பிறகு ட்விட்டரில் செம்ம ஆவேசமாக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். அதில் “என் எச்சிலை மையாக்கி எழுதியவர்களைத் தாண்டித்தான் இந்த உயரத்துக்கு வந்துள்ளேன். ஏனோதானோ பேர்வழிகள் என்னை அழுக்காக்கி, அசிங்கப்படுத்தலாம் என கருதுகின்றனர். அவர்கள் நினைப்பது கைகூடாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும். 

சோதனைகள் வந்தாலும் என் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன். மானமும், மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு, புரிந்தால் சரி.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தன் ஆவேசமான ரியாக்‌ஷன் மூலம் தன்  மீது  உருவாக்கப்படும் இழுக்கிற்கு ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.’ என்று பதில் சொல்லியிருக்கிறார் நாஞ்சில். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத்தை இப்படியொரு வீடியோ சர்ச்சைக்குள் இழுத்துவிட்டது வெற்றிவேல்தான்! என்று சிலர் திரிகொளுத்திப் போட்டுள்ளனர் அரசியல் அரங்கில். அதுவும் தாறுமாறாக வெடித்துச் சிதறிக் கொண்டுள்ளது.