நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி மொழி எதிர்ப்பு :

மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ச்சியாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு துவக்கம் முதலே தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் இன்னும் மாறவில்லை. சமீபத்தில் மும்மொழி கல்வி கொள்கையையும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுவும் ஒருவகை இந்தி திணிப்பு தான் என திமுக கூறிய நிலையில் தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை தான் பின்பற்றப்படும் என அதிமுக அரசு கூறியது. 

இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர், நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்க செய்யும். 

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி மொழிதான் : 

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள், தொடர்பு வழியாக இந்தியாவின் மொழி இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குறிப்பிட்டார். 

இதனிடையே, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியை திணிக்க நினைத்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும். #இந்திவேண்டாம்_போடா #StopHindiImposition என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க : ”புஷ்பா, புஷ்பா ராஜு.!” 10ம் வகுப்பு தேர்வுத்தாளில் ‘மாஸ்’ காட்டிய மாணவன்.. வைரல் போட்டோ !!