”புஷ்பா, புஷ்பா ராஜு.!” 10ம் வகுப்பு தேர்வுத்தாளில் ‘மாஸ்’ காட்டிய மாணவன்.. வைரல் போட்டோ !!
திரைப்படம் எப்போதும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பு எப்போதுமே அதிகம் தான். அதுமட்டுமின்றி புதிதாக வெளிவரும் படமோ, பாடலோ வைரல் ஆவதே இங்கிருந்து தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அல்லு அர்ஜுன் - புஷ்பா :
அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ் பார்ட் 1’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்னணி நடிகையான சமந்தா, ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
‘ஊ சொல்றியா மாமா, வாயா சாமி ஆகிய இரண்டு பாடல்களும் இப்போது வரை பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டையை கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும், அல்லு அர்ஜூனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
10ம் வகுப்பு மாணவர் செய்த சம்பவம் :
புஷ்பா திரைப்பட பீவர் இப்போது வரை போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தேர்வு எழுதியுள்ளான். அதில் 'புஷ்பா, புஷ்பா ராஜ், அபுன் லிகேகா நஹி' என்று எழுதியுள்ளான்.
தேர்வு தாளில் எழுதப்பட்ட இந்த விடைத்தாள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.