Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு... நிதி அமைச்சரின் மாஸ் அறிவிப்பு..!

கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Home for 8 lakh families in next 5 years... Finance Minister Palanivel Thiagarajan Announcement
Author
Chennai, First Published Aug 13, 2021, 12:09 PM IST


கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்.

*  ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

*  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்.

*  ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்.

*  ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

*  குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

*  கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

*  அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்.

*  1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்; ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் ஈரநிலங்களின் சூழலியலை மேம்படுத்த, முதலமைச்சர் தலைமையில் 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' அமைக்கப்படும் 

* தமிழகத்தில் காடு மற்றும் வனங்களின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு பசு இயக்கம் உருவாக்கப்படும்.

* தூய்மை பாரத இயக்கம் ரூ.400 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி நடப்பு ஆண்டில் இருந்து ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.

* ஒவ்வொரு நகரத்திற்கும் நீர் சமநிலை திட்டங்கள் தயாரிக்கப்படும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இருபத்தி ஏழு நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios