சசிகலாவின் பிறந்த  நாளான  இன்று அவருடைய ஆதரவாளர்கள் ஒருபுறம் மகிழ்ச்சி வெள்ளத்தில்  கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் சசிகலா  மற்றும் தினகரனின் ஆதரவாளர்கள்  அதிரடியாக போயஸ் இல்லத்திலிருந்து  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன்

ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷம் அமைக்கப்படும் எனவும், அவர் வாழ்ந்த வேதா இல்லமான  போயஸ் கார்டன் “நினைவிடமாக மாற்றப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி அதிரடியாக தெரிவித்தார்.

தீபா எதிர்ப்பு

முதல்வரின் இந்த அறிவிப்புகு பின், ஜெ- வின் அண்ணன் மகளான தீபா இதற்கு கடும் எதிர்பை  தெரிவித்துள்ளார்.வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து என்றும், எங்களுடைய கருத்தை கேட்காமல்  அரசு இது போன்ற முடிவை எடுப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார் தீபா. மேலும் நீதிமன்ற  உதவியுடன் வேதா இல்லத்தை மீட்டு எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றம்

வேதா இல்லத்திலிருந்து, சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளர்களை போயஸ் இல்லத்திலிருந்து  அதிரடியாக இன்று வெளியேற்றப்பட்டனர். மேலும் ஜெயலலிதா  இருக்கும் போது  எந்த அளவிற்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே அளவு பாதுகாப்பு  தற்போது  வழங்கப்பட்டுள்ளது.

காரணம் தீபா  மற்றும் அவரது ஆதரவாளர்கள் என யாரும் எந்த அசம்பாவிதத்தையும் ஏற்படுத்திட கூடாது என்பதற்காக  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அதே வேளையில் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றபடும் என  அரசு தெரிவித்துள்ளதையடுத்து, மக்கள்  இன்று முதலே அங்கு வருகை தர வாய்ப்பு  உள்ளது என்பதாலும்  கூடுதல்  பாதுகாப்பு  வழங்கப் பட்டுள்ளது.

குறிப்பு :

தோட்ட வேலை செய்யும்  நபர்களை தவிர  மற்றவர்களை  வேதா  இல்லத்திலிருந்து  வெளியேற்றி,   போயஸ் கார்டன்  முழுவதும் போலிஸ் கட்டுபாட்டில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது