திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தயாநிதி மாறன் டிஆர் பாலு இவர்கள் தலைமைச் செயலாளரை சந்திக்கபோன போது அங்கு அவர் நடந்து கொண்டதை விமர்சனம் செய்த போது தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையை பயன் படுத்தியதற்காக எங்கே தாங்கள் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் முன் ஜாமீன் பெற்றார்கள். அடுத்ததாக பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் முடிதிருத்துவோரை அம்பட்டயன் என்று பேசியது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த நிலையில் திருமா திமுகவை கண்டிக்காமல் அவர்களுக்கு கால் கழுவிக்கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் வெளியானது. இதையடுத்து ட்வீட்டரில் ஹெச்.ராஜாவும் திருமாவளவனும் ஒருவருக்கொருவர்  மாற்றி மாற்றி உண்மை பேசி யுத்தம் செய்து, ராஜாவை ஓடவிட்டு வருகிறார்.

அவர்களின் யுத்த பதிவுகள் தான் கீழே....

திருமாவளவன் தனது டிவீட்டர் பக்கத்தில் "பாஜக சாதிஅரசியல்" என குறிப்பிட்டு, தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வருவாரா? என்றும், இது குறித்து அதிமுக கூட்டணி கட்சியான பாஜக இதனை வலியுறுத்துமா? என கேள்வி எழுப்பி கேள்வி எழுப்பி பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா: “தலித் மக்களுக்கான மாநில ஆணையம் தமிழகத்தில் அமைத்திட மாநில அரசை இன்றே கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதில் முதல் புகாராக முரசொலி பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்து புகாரளிக்க திருமாவளவனுக்கு துணிச்சல் உண்டா?” என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் கேள்விக்கு பதிலளிக்காமல், அமைதி காத்து அதற்கு மாறாக வெவ்வேறு பிரச்சனைகளை திசைதிருப்பி வருகிறார் திருமாவளவன்.

பாஜக..., திறமையைப் பார்த்தே பொறுப்பு தருகிறது. ஏற்கனவே பங்காரு லக்ஷ்மண் அவர்களை தேசிய தலைவராக நியமித்தோம். தமிழகத்தில் Dr.கிருபாநிதியை அடுத்து சகோதரர் முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா? என்று ஹெச்.ராஜா பதிவு செய்திருந்தார்.

சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும்  தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா? 
தலித் மற்றும் பழங்குடி மக்களின்மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பாஜக திருப்பி கேள்வி எழுப்பியிருக்கிறார் திருமா.

  மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த postmatric scholarship கல்விஉதவித் தொகையைமுடக்கியதுஏன்? மீண்டும்அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து,தமது தலித் பாசத்தைக்காட்ட பாஜக முன்வருமா?- திருமாவளவன்.


இந்தியாவெங்கும்  தலைவிரித்தாடும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம்வேண்டும் என்பதில், பாஜகவின் நிலைப்பாடு என்ன? மத்தியில்  ஆளுங்கட்சியாயிருந்தும் அப்படியொரு சட்டமியற்ற தயக்கமென்ன?அச்சட்டத்தை இயற்றும்படி தமிழகஅரசையும் பாஜக வற்புறுத்துமா?- திருமாவளவன்.

பஞ்சமிநிலத்தில்தான் உள்ளதென குற்றச்சாட்டு உள்ளதே; அது பாஜகவுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியுமெனில், அதனையும் மீட்டு தலித்மக்களிடம் ஒப்படைக்க பாஜக_போராடுமா? அதன்மூலம் தலித்மக்கள் மீதான தமது அக்கறையை உறுதிப் படுத்துமா?- திருமாவளவன்.


 
பஞ்சமி நிலங்களை மீட்பதற்கென விசிக விடுத்த கோரிக்கையை ஏற்று, கலைஞர் நியமித்த நீதியரசர் மருதமுத்து ஆணையத்தை உயிர்ப்பித்து,மீண்டும் செயல்பட வைக்க தமிழக அரசிடம், கூட்டணிகட்சியான பாஜக கோரிக்கைஎழுப்புமா? அல்லது புதியஆணையம் அமைக்கவலியுறுத்துமா? தமிழ்நாடெங்கும்சுமார் 12.5லட்சம்ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. ஆனால், அவை தலித்அல்லாதோரின் ஆக்கிரமிப்பில்உள்ளன. அவற்றைஉரிய  தலித்மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமெனஉயர்நீதி மன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன.அவற்றைமீட்பதற்கு பாஜக தமிழகமுதல்வரிடம் வலியுறுத்துமா? -திருமாவளவன்.