Asianet News TamilAsianet News Tamil

இந்து மதமும், இந்துத்துவாவும் வெவ்வேறு... பாஜக- ஆர்.எஸ்.எஸுக்கு பாடம் எடுத்த ராகுல் காந்தி..!

இந்து மதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் என்ன வித்தியாசம், அவை எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்?

Hinduism and Hindutva are different, Congress' ideology overshadowed by BJP, RSS: Rahul Gandhi
Author
Delhi, First Published Nov 12, 2021, 4:38 PM IST

தேசியவாத சித்தாந்தம், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் “வெறுக்கத்தக்க சித்தாந்தத்தால்” மறைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.Hinduism and Hindutva are different, Congress' ideology overshadowed by BJP, RSS: Rahul Gandhi

வீடியோ கான்பரன்சிங் மூலம் 'ஜன் ஜாக்ரன் அபியான்' பயிற்சி நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்து மதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் சுட்டிக்காட்டினார். “இந்து மதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் என்ன வித்தியாசம், அவை எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்? அவை ஒரே மாதிரியானவை என்றால், அவர்களுக்கு ஏன் ஒரே பெயர் இல்லை? அவை வெளிப்படையாக வேறுபட்ட விஷயங்கள். இந்து மதம், ஒரு சீக்கியரை அல்லது முஸ்லிமை இழிவு செய்யாது. நிச்சயமாக இந்துத்துவம் தான் அப்படி நடந்து கொள்ளும்’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். Hinduism and Hindutva are different, Congress' ideology overshadowed by BJP, RSS: Rahul Gandhi

காங்கிரஸின் சித்தாந்தத்தை "நம்முடைய சொந்த மக்கள் மத்தியில் ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்யாததால் அது மறைக்கப்பட்டுள்ளது. இன்று, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் வெறுப்பு சித்தாந்தம் காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மூடிமறைத்து விட்டது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் சித்தாந்தம் உயிருடன் உள்ளது. துடிப்பானது. ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் ‘சன்ரைஸ் ஓவர் அயோத்தி: நேஷன்ஹுட் இன் எவர் டைம்ஸ்’ என்ற புத்தகத்தில் உள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் தொடர்பாக குர்ஷித் தனது புத்தகத்தில் "ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஜிஹாதி இஸ்லாத்துடன் இந்துத்துவாவை ஒப்பிட்டுப் பேசியதற்காக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. Hinduism and Hindutva are different, Congress' ideology overshadowed by BJP, RSS: Rahul Gandhi

வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, அயோத்தி குறித்த குர்ஷித்தின் புத்தகம் "மக்களின் மத உணர்வுகளை" புண்படுத்தியுள்ளது என்று கூறினார். அயோத்தி தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் குர்ஷித் எழுதிய புத்தகம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் குர்ஷித் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios