Asianet News TamilAsianet News Tamil

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை; கத்தாரில் இருந்து இந்திய தொழிலாளர்கள் நாடு கடத்தல்? வைரல் வீடியோ

Nupur Sharma row : பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Hindu Workers Being Deported From Qatar After Nupur Sharma Controversy circulated old video
Author
First Published Jun 14, 2022, 11:30 AM IST

இதையடுத்து நுபுர் சர்மாவை பாஜக கட்சி சஸ்பெண்ட் செய்தது. நவீன் குமார் ஜிண்டால் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியது. மேலும், பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்பினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

Hindu Workers Being Deported From Qatar After Nupur Sharma Controversy circulated old video

உத்தர பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. உத்தர பிரதேசம், ஜார்க்ண்ட் மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாகின. பல இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. 

கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு பிறகு தான் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கத்தார் அரசு அந்நாட்டில் பணியாற்றும் இந்து தொழிலாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியது. 

இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என தற்போது தெரிய வந்து உள்ளது. கடந்த மார்ச் மாதம் ரெட்கோ இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்ட சம்பள அறிக்கைக்கு எதிராக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராடினர் என்றும், அந்த வீடியோ தான் தற்போது போலியாக பரப்பப்பட்டு வருகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?

Follow Us:
Download App:
  • android
  • ios