Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .


நடிகர் சூரி திமுகவுக்கு ஜால்ரா போடும் வேலையை நிறுத்திக் கொள் வேண்டும் என இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. இந்தக் கோயில்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரது உணவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. 

 

Hindu People's Party pressuring Suri to issue a public apology on the Hindu temple issue
Author
Madurai, First Published Aug 8, 2022, 6:26 PM IST

நடிகர் சூரி திமுகவுக்கு ஜால்ரா போடும் வேலையை நிறுத்திக் கொள் வேண்டும் என இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. இந்தக் கோயில்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரது உணவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. 

நடிகர் கார்த்திக்  நடித்துள்ள விருமன் பட பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட  நடிகர் சூரி, நடிகர் சூர்யா நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் குறித்து பேசினார், ஆயிரம் கோயில்களை கட்டுவதை விட, அன்னச் சத்திரங்கள் கட்டுவதைவிட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். இந்த பேச்சுக்கு பல்வேறு இந்து இயக்கங்கள் மத்தியில் கண்டனம் எழுந்தது. கோவில்களும் அன்னச் சத்திரங்களும் அவ்வளவு கேவலமா, சூரி இந்து கோவில்களுக்கு எதிராக பேசிய இந்த பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Hindu People's Party pressuring Suri to issue a public apology on the Hindu temple issue

இந்த விவகாரத்தில் நடிகர் சூரியை கண்டித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ஆரம்பக் கட்டத்தில் எப்படி இருந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும், இந்து கோவில்களை விட நடிகர் சூர்யா அறக்கட்டளை முக்கியமா என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் நடிகர் சூரி தனது பேச்சுக்கு நேற்று விளக்கம் அளித்திருந்தார். அதில், நான் எப்போதும் மீனாட்சி அம்மனை கும்பிட்டுவிட்டுதான் பேசுவேன், நான் நடத்தும் ஹோட்டலுக்கும் அம்மன் என்றுதான் பெயர்  வைத்துள்ளேன், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் இல்லை என பேசினார், நான் படிக்காதவன் அதனால் அதனுடைய முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:  “ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

இந்நிலையில் அவருக்கு எதிரான அறிவிக்கப்பட்ட போராட்டங்களும் கைவிடப்பட்டன, ஆனாலும் இந்து மக்கள் கட்சி  மதுரை மாவட்ட ஆன்மீக பிரிவு நடிகர் சூரியை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி ஊடகங்களை கூட்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது உணவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு.. ஒரே அறிவிப்பில் ஆளுநரை ஆடவிட்ட அமைச்சர் பொன்முடி.

திமுகவிற்கு சால்ரா தட்டும் வகையில் இந்துக்களையும் இந்து கோவில்களையும், அன்னதானம் வழங்கும் சத்திரங்களையும், அவதூராக பேசிய நடிகர் சூரியை வன்மையாக இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி கண்டிக்கின்றது. நடிகர் சூரி, ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது நல்லது என்றும், அன்னதானம் சத்திரத்தில் அன்னதானம் வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதையும் கண்டித்து மதுரையில் நடிகர் சூரி நடத்தி வரும் அம்மன் உணவகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தோம். ஆனால் நடிகர் சூரி  இந்துக்களுக்கிடையே எதிர்ப்பு அலைகள் வீசுவதை தெரிந்து கொண்டு வருத்தம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். 

Hindu People's Party pressuring Suri to issue a public apology on the Hindu temple issue

நடிகர் சூரி முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஊடகங்கள் மூலமாக நடிகர் சூரி மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் அம்மன் உணவகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தவும் இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட  ஆன்மீகம் அணி தயங்காது என்பதையும் நடிகர் சூரிக்கு தெரிவித்து கொள்கிறோம். நடிகர் சூரி நடித்துள்ள விருமன் திரைப்படத்தை தமிழக இந்துக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நடிக்கின்றவர்கள் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நடிகர் சூரி முறையாக மன்னிப்பு கேட்காவிட்டால் இந்து அமைப்புக்கள் ஒன்றிணைந்து மிக பெரிய போராட்டம் நடைபெறும் என்பதை நடிகர் சூரிக்கு தெரியபடுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios