Asianet News TamilAsianet News Tamil

சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு... எடப்பாடி தரப்பில் அடுத்த நடவடிக்கை...!

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பொன்னையன் தகவல் தெரிவித்துள்ளார்.

Highways tender case...Appeal against the CBI inquiry
Author
Chennai, First Published Oct 13, 2018, 12:00 PM IST

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பொன்னையன் தகவல் தெரிவித்துள்ளார்.  Highways tender case...Appeal against the CBI inquiry

நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாராதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதிமுக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Highways tender case...Appeal against the CBI inquiry

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய பொன்னையன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசரித்த நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. Highways tender case...Appeal against the CBI inquiry

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை. நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை என்றார். வழக்கமான டெண்டர் வேறு, எனோடிக் டெண்டர் வேறு. சாலை போடுவதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் சேர்த்தே டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில்தான் குறைந்த விலைக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என பொன்னையன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios