எடப்பாடிக்கு சிக்கல்! முதல்வர் மீதான வழக்கில் திடீர் திருப்பம்...

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Sep 2018, 12:51 PM IST
Highway Department scam...Edappadi Palanisamy Trouble
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, தன்னுடைய உறவினர்கள், 
நண்பர்கள் ஆகியோருக்கு கொடுத்ததாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு துறையில் 
ஏற்கனவே புகார் கூறியிருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு கொடுத்ததாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு துறையில் ஏற்கனவே புகார் கூறியிருந்தார். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். 

சென்னை, உயர்நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், கிட்டதட்ட 4,800 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுதான் விசாரிக்க வேண்டும் என்றும், ஏனென்றால் அந்த துறையின் தலைமையில் இருக்கக் கூடியவர்தான் தமிழக முதலமைச்சர். எனவே புகார் குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, அதை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்று புதிய மனு ஒன்றை நேற்று ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினார். எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு குறிப்பிட்ட தொகையைவிட அதிக அளவில் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதாகவும், உலக வங்கியுடன் நிதியுதவியுடன் செயல்படும் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் விதிமுறைகள் மீறப்பட்டுள்ள்தாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் துறையின் தலைமை என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் இந்த அதிகாரிகளை மாற்றக் கூடிய அதிகாரம், நியமிக்கக்கூடிய அதிகாரம் என்பது அவரிடம்தான் உள்ளது.

 

நெடுஞ்சாலை துறையும் அவரிடம் தான் உள்ளது. எனவே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்ற கேள்வியை 
முன் வைத்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு அமைத்து அது உயர்நீதிமன்ற கண்ணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், ஒப்பந்ததாரர்கள் அனைவருமே 1991 ஆம் ஆண்டில் இருந்து ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்த அரசு வந்தாலும், அந்த அரசுகளிடம் ஒப்பந்தங்களைப் பெற்றுவந்ததாகவும், உறவினர்கள் என்பதற்காக இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கூற முடியுமா? என்ற வாதத்தை 
முன் வைத்தார்.

 

இதனை உலக வங்கி கண்காணித்து வருவதாகவும் அப்போது வழக்கறிஞர் விஜயநாராயணன் கூறினார். இந்த வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபத் ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை, எப்போதெல்லாம் விசாரணை நடைபெற்றது, யாரிடம் எல்லாம் விசாரணை நடைபெற்றது? என்னென்ன விசாரணை நடைபெற்றது என்ற விவர அறிக்கையை கேட்டுள்ளார். அந்த விவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள நிபுணர் குழு, அறிக்கை ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியை முன் 
வைத்துள்ளார். இது குறித்த விரிவான அறிக்கையை வரும் திங்கட் கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

loader