நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு எடப்பாடி வழங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். 3 மாதத்தில் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இலாகாவான நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வழங்கக்கூடிய ஒப்பந்த பணிகள், கிட்டதட்ட 5 திட்டங்கள் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளில் சம்பந்தி சுப்பிரமணியம், நண்பர் நாகராஜன் செய்யாதுரை, சேகர் ரெட்டி, இவர்களுக்கு வழங்கியுள்ளா. அப்போது முறைகேடு நடந்துள்ளது. உறவினர்கள், நண்ர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்ற புகார் திமுக புகார் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை ஜகதீஷ் சந்திரா முன் விசாரணை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை நியாயமாக
இருக்காது, நேர்மையாக இருக்காது என்று திமுக வழக்கறிஞர் சார்பில் வாதிட்டார். இந்த முறைகேடு புகார் குறித்து சிறப்பு புலனாய்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதல்வர் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.