இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா, தினகரன், ஓ பன்னீர் செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது நாங்கலே உண்மையான அதிமுக எனவும் எங்களுக்கே கட்சியின் பெயரையும் சின்னதையும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. 

இதனால் பெரும் குழப்பத்திற்கு ஆளான தேர்தல் ஆணையம் சின்னத்தையும் பெயரையும் முடக்கியது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெருவோருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்ககோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு  தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.