சீன அதிபர்- இந்திய பிரதமர் மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கும் நிலையில் அவர்களை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

பேனர் வைக்க முன்பே உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு பேனர் வைக்கக்கூடாது என கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பேனர் நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் சீன அதிபர் ஜின் பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சந்திக்க உள்ளனர். அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இது குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், மோடி- ஜினி பிங் ஆகியோரை வரவேற்று வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி வைக்க வேண்டும். 

உரிய அஸ்திவாரம் பலமான கட்டுமானங்களுடன் மேனர் வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பேனர் வைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். சென்னை விமான நிலையம்  முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைத்துக் கொள்ளலாம்’’என உத்தரவிட்டுள்ளனர்.