17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வடிர 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. 
இந்நிலையில் நடிகை ஹேமமாலினிக்கு பாஜக சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை ஹேமமாலினி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

இதில் அவரது சொத்து விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் கொடுத்துள்ள விவரங்களின்படி 101 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.

இதில் பங்களாக்கள், நகைகள், ரொக்கம், பங்குச் சந்தை முதலீடுகள், போன்றவை அடங்கும். கடந்த முறை மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஹேமாமாலினி அப்போது தமது சொத்து மதிப்பை 66 கோடி ரூபாய் எனத் தெரிவித்திருந்தார். 5 ஆண்டுகளில் இந்த வருமானம் 35 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல் ஹேமாமாலினியின் கணவர் நடிகர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பும் 12 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதன்படி பார்த்தால் கணவரும் மனைவியும் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் பத்துகோடி ரூபாய் வீதம் வருமானம் ஈட்டியதாக கணக்கிடப்படுகிறது.