ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த துணிச்சலான ராணுவ அதிகாரி பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிடரின் உடல் பெரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமான சூழ்நிலையில், பிரிகேடியரின் மனைவி கீதிகா மற்றும் மகள் ஆஷ்னா லிடர் ஆகியோர் கண்ணீர் மல்க அவருக்கு 'இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி.. வீரமரணம் அடைந்த எனது கணவருக்கு நான் அழுதுகொண்டு அல்ல, புன்னகையுடன் உடை கொடுக்கிறேன் என ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பிரிகேடியரின் மனைவி கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது துணைவியாருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவர் வந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ராணுவ தளபதி ராவத்தின் மனைவியும் அடக்கம். இந்த கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவர், அவரது மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக முப்படை தளபதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த கருப்பு பெட்டியை கைப்பற்றி அதை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்த பிறகே விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும். இந்நிலையில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹலிகாப்டர் விபத்து தொடர்பாக கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்ற பின்னரே விபத்திற்கான காரணங்கள் தெரியவரும், எனவே ஹெலிகாப்டர் உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த துணிச்சலான ராணுவ அதிகாரி பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிடரின் உடல் பெரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமான சூழ்நிலையில், பிரிகேடியரின் மனைவி கீதிகா மற்றும் மகள் ஆஷ்னா லிடர் ஆகியோர் கண்ணீர் மல்க அவருக்கு 'இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிகேடியரின் மனைவி கீதிகா லிடர் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட தனது கணவரின் சவப்பெட்டியின் முன் தலை குனிந்து அதை முத்தமிடுவதைக் காண முடிகிறது. பிரிகேடியர் எல்.எஸ்.லிடரின் மகள் ஆஷ்னாவும் தாயுடன் இருந்து தந்தையின் உடலுக்கு ரோஜா மலர்தூவி அஞ்சலி செலுத்தனர். அப்போது பிரிகேடியரின் மனைவி, 'நாம் அவர்களுக்கு அழுது கொண்டு அல்ல புன்னகையுடன் விடைகொடுக்க வேண்டும்' என்று சிரித்துக் கொண்டே கூறினார். நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி, இது ஒரு பெரிய இழப்பு என்று அப்போது அவர் உணர்சிவயத்தின் மிகுதியில் கூறினார். அவரின் இந்த பேச்சு பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதேபோல் பிரிக்கேடியிர் எல்.எஸ் லிடரின் மகள் ஆஷ்னா, 'எனக்கு 17 வயதாகப் போகிறது. 17 வருடங்கள் அவர் எங்களுடன் இருந்தார், அவரின் இனிய நினைவுகளுடன் நாம் முன்னே செல்வோம். இது நாட்டுக்கு பெரிய இழப்பு. என் தந்தை என் வைரம், என் சிறந்த நண்பர். ஒருவேளை அது விதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் சிறந்த விஷயங்கள் நம் வழியில் வரும். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தார் என கூறினார். பிரிகேடியர் லிடார் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவை பூர்விகமாக கொண்டவர் ஆவார். ஜெனரல் ராவத்தின் பாதுகாப்பு குழுவில் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதுகாப்பு உதவியாளராக இருந்தார். அவரது பெயர் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டது மற்றும் அவர் விரைவில் பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்பதற்காக ஜெனரல் ராவத்தின் பாதுகாப்பு குழுவில் இருந்து வெளியேற இருந்தார். ஆனால் அதற்கு முன் அவர் இந்த விபத்தில் சிக்கி தனது உயிரை இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
