Asianet News TamilAsianet News Tamil

Heavy Rain: அட ஆண்டவா.. இது என்ன கொடுமை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வச்சு செய்ய போகுதாம்.

 29.11.2021, 30.11.2021, அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Heavy rain: Oh my God .. what will happen .. Meteorology warning next 4 days heavy rain.
Author
Chennai, First Published Nov 27, 2021, 1:42 PM IST

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 27.11.2021: ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Heavy rain: Oh my God .. what will happen .. Meteorology warning next 4 days heavy rain.

28.11.2021: வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 29.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.11.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்பெய்யக்கூடும். 01.12.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆவடி  (திருவள்ளூர்) 20, மகாபலிபுரம்  (செங்கல்பட்டு) செங்கல்பட்டு (செங்கல்பட்டு ) செய்யூர்  ( செங்கல்பட்டு ) தலா 18, கட்டப்பாக்கம்  (காஞ்சிபுரம்) 17, திருக்கழுக்குன்றம்  (செங்கல்பட்டு ) 16, மதுராந்தகம் (செங்கல்பட்டு ) , சோழவரம்  ( திருவள்ளூர் ) , பரங்கிப்பேட்டை  (கடலூர்  ) தலா 15, திருவள்ளூர்  (திருவள்ளூர் )13, காஞ்சிபுரம்  (காஞ்சிபுரம்) , செம்பரபக்கம்  ( திருவள்ளூர் ) , பொன்னேரி  (திருவள்ளூர் ), தாம்பரம்   ( செங்கல்பட்டு ) , அம்பத்தூர்  ( திருவள்ளூர்) தலா 12 , சிதம்பரம்  (கடலூர்) காரைக்கால்  (காரைக்கால்) , கொரட்டூர்  ( திருவள்ளூர்) , திருப்போரூர்  (செங்கல்பட்டு) , ரெட்  ஹில்ஸ்  (திருவள்ளூர் ) தலா 11, கேளம்பாக்கம்  ( செங்கல்பட்டு ) , ஸ்ரீபெரும்புதூர்  (காஞ்சிபுரம் ) , பெரம்பூர்  ( சென்னை) , அண்ணா  பல்கலைக்கழகம் (சென்னை), தாமரைப்பக்கம்  ( திருவள்ளூர் ) , சென்னை (நுங்கம்பாக்கம்) ( சென்னை ) தலா 10. 

Heavy rain: Oh my God .. what will happen .. Meteorology warning next 4 days heavy rain.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  வங்க கடல் பகுதிகள் 27.11.2021,28.11.2021: குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 29  ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக 29.11.2021, 30.11.2021, அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01.12.2021: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios