Asianet News TamilAsianet News Tamil

Heavy Rain: ஆண்டவா.. என்ன கதி ஆகப்போகுதோ.?? 17 மாவட்டங்களில் அடித்து ஊற்றபோகுதாம்.. வானிலை ஆய்வு மையம் பகீர்.

வங்க கடல் பகுதிகள் 26.11.2021,27.11.2021:, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Heavy Rain: Lord .. what will happen next ?? Heavy Rain for 17 districts .. Meteorological Center shocking.
Author
Chennai, First Published Nov 26, 2021, 1:41 PM IST

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 26.11.2021 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 27.11.2021: சென்னை, திருவள்ளூ,ர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Heavy Rain: Lord .. what will happen next ?? Heavy Rain for 17 districts .. Meteorological Center shocking.

 28.11.2021: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29.11.2021:, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை , புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  தென்காசி,  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,   நீலகிரி,  கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
30.11.2021:, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy Rain: Lord .. what will happen next ?? Heavy Rain for 17 districts .. Meteorological Center shocking.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காயல்பட்டினம் (தூத்துக்குடி) 31, தூத்துக்குடி (தூத்துக்குடி) 27, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 25, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 19, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) 18, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) 16,  வைப்பார் (தூத்துக்குடி) 15, காரைக்கால் (காரைக்கால்), திருவையாறு (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), ஒட்டபத்திரம் (தூத்துக்குடி), பெலாந்துறை (கடலூர்) தலா 12, திருப்புவனம் (சிவகங்கை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சாத்தூர் (விருதுநகர்), பேராவூரணி (தஞ்சாவூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) தலா 11, திண்டுக்கல் (திண்டுக்கல் ), திருவாரூர் (திருவாரூர்), பூடலூர் (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை) தலா 10,  தாம்பரம் (செங்கல்பட்டு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), நன்னிலம் (திருவாரூர்), கேவிகே காட்டுக்குப்பம்  (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம்  (செங்கல்பட்டு), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), கடம்பூர் (தூத்துக்குடி), மணியச்சி (தூத்துக்குடி), மணியச்சி (தூத்துக்குடி), மணியச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 9,

Heavy Rain: Lord .. what will happen next ?? Heavy Rain for 17 districts .. Meteorological Center shocking.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 26.11.2021,27.11.2021:, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 29  ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக 29.11.2021, 30.11.2021, அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios