தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அப்பொறுப்புக்கு மீண்டும் ராதாகிருஷ்ணனன் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பீலா ராஜேஷ் புதிய செயளாலராக பொறுப்பேற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தினமும் இவர் தான் கொடுத்து வந்தார்.ஆனால், சென்னையில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா பரவியது.

 இந்த துறையில் இருக்கும் பீலா ராஜேஷ்க்கு போதுமான அனுபவம் இல்லாததால் கொரோனாவை தடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும், உடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு போதைய ஒத்தழைப்பு கொடுப்பதில்லை என்ற புகாரும் இருந்து வந்தது. இதனையடுத்து, கொரோனா சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள கவனித்து வந்தார். 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.