பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் முன்மாதிரியாக உள்ள நிலையில் முகக் கவசம் அணியாமல் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.  வீடுகளில் முடங்கிக் கிடக்கும் எல்லோருக்கும் மாலை 6 மணிதான் பிரைம் டைமாக உள்ளது. யார் எந்த வேலையில் இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு டிவி சேனல்கள் முன் அமர்ந்து விடுகின்றனர். காரணம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த நேரத்தில்தான் 24 மணி நேர கொரோனா குறித்த புள்ளி விவரங்களை அடுக்குகிறார். புயல் மற்றும் மழை காலங்களில் சென்னை வானிலை மைய இயக்குனராக இருந்த ரமணன் அடுத்து என்ன சொல்வார் என்று எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் இப்போது கொரோனா தொற்று காலத்தில் பீலா ராஜேஷ் வெளியிடும் அப்டேட்டுக்காக தமிழகமே காத்துக்கிடக்கிறது. 

 இப்படி தினமும் கொரோனா நியூஸ் புல்லட்டின் வாசிக்கும் பீலா ராஜேஷ்க்கு ஃபேஸ்புக்கில் அவருடைய ரசிகர் சார்பில் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் அணிந்து வரும் ஆடை அலங்காரத்தைப் புகழ்ந்து ஒரு கூட்டம். பல சமூக வலைத் பதிவிட்டு வருகிறது. அது மட்டுமின்றி அவரைப்போலவே இப்பொழுது ஒரு சிறுமி உடை அலங்காரம் செய்துகொண்டு செய்தி வாசிப்பது போன்ற பதிவுகள் வலம் வரத் தொடங்கிவிட்டன. பீலா ராஜேஷின் பத்திரிகையாளர் சந்திப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  பராட்டியிருந்தார். இதனால், இவருக்கு பாராட்டு மழையும் தொடர்ந்த நிலையில் திடீரென்று கடந்த 10ம் தேதி மாலை தலைமைச் செயலாளர் சண்முகம் கொரோனா குறித்து புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். அவரது அருகில் முகக்கவசம் அணிந்து நின்றிந்தார். மேலும் பீலா ராஜேஷ் ஓரம்கட்டப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின.

மேலும்,  சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி - பிறகு சுகாதாரச் செயலாளரை முன்னிலைப்படுத்தி - அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித்தொடர்பாளராக மாற்றி கழுத்தறுப்பு அரசியலை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்தார். இதனையடுத்து, நேற்று மீண்டும்  பீலா ராஜேஷ் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது அவர் சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார். 

தும்மல், இருமல் மூலம் கொரோனா தொற்று பரவும் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணி வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோர் பேட்டியளிக்கும் போது எப்போதும் முக கவசம் அணிந்தபடிதான் இருப்பார்கள். முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி பேசும் போதும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்திருந்தார். இதன் மூலம் இவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முக கவசம் அணிவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூட முக கவசம் இல்லாமல் தான் இருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.