Asianet News TamilAsianet News Tamil

சிலிண்டர் விலையை 1000 ரூபாய் ஆக்காம விடமாட்டார்... பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்.பி. அட்டாக்.!

பெட்ரோல் விலையை ரூ.100ஆக உயர்த்தியதுபோல் சமையல் சிலிண்டர் விலையை ரூ.ஆயிரமாக பிரதமர் நரேந்திர மோடி ஆக்கிவிடுவார் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார். 
 

He will not let the price of a cylinder go up to 1000 rupees ... Congress MP attacked on Prime Minister Modi.!
Author
Virudhunagar, First Published Oct 6, 2021, 8:52 PM IST

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உத்தரப்பிரசேதத்தில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லப்போன பிரியங்கா காந்தி 2 நாள்களாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் முதல்வர் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டார். உத்தரப்பிரசேதத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தொடர்ந்து ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதை காங்கிரஸ் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.He will not let the price of a cylinder go up to 1000 rupees ... Congress MP attacked on Prime Minister Modi.!
மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்  2007-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏழ்மை, வறுமையால் மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பற்றி தரம் தாழ்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சிக்கிறார். அவரையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும்  இந்தத் திட்டத்தின் அருமை பெருமையை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் வந்து பார்க்க வேண்டும். இதை நான் அழைப்பாக விடுக்கிறேன். லட்சக்கணக்கான கிராமத்து ஏழைக் குடும்பங்களைக் காக்கும் இத்திட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.He will not let the price of a cylinder go up to 1000 rupees ... Congress MP attacked on Prime Minister Modi.!
தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துவருகிறது. இன்றுகூட ரூ.15 உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலையை ரூ.100ஆக உயர்த்தியதுபோல் சமையல் சிலிண்டர் விலையை ரூ.ஆயிரமாக ஆக்கிவிடுவார் மோடி. இந்தச் சர்வாதிகார ஆட்சிக்கு 2024-ஆம் ஆண்டில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்று 2018-ஆம் ஆண்டில் போட்ட உத்தரவை நீதிமன்றம் மார்ச் 19-இல் நீக்கியது. ஆனால், பழைய உத்தரவை மேற்கோள்காட்டி சிபிஐ மனுத்தாக்கல் செய்திருக்கிறதுது. சிபிஐ தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். டெல்லியில் மாசு ஏற்பட காரணமான 26 காரணிகளில் பட்டாசு 26-ஆவது இடத்தில்தான் உள்ளது. முதல் 6 காரணிகளால்தான் 90 சதவீத மாசு ஏற்படுகிறது. அப்படியிருக்க பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடைது இல்லை.” என்று மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios