Asianet News TamilAsianet News Tamil

ஆர்.கே.நகரில் போட்டியிடாததற்கு காரணம் இவர்தான்... முதல் முறையாக சஸ்பென்ஸ் உடைத்த விஷால்

He prayed that I shouldnt contest in RK Nagar Election says Vishal
He prayed that I shouldn't contest in RK Nagar Election says Vishal
Author
First Published Dec 28, 2017, 7:21 PM IST


R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக் கொண்டதில் மித்ரனும் ஓருவன் என ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து விஷால் விளக்கமாக கூறியுள்ளார்.

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளிவர இருக்கும் இரும்புத்திரை படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் கூறியதாவது; இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம்.

ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக் கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.

He prayed that I shouldn't contest in RK Nagar Election says Vishal

நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் நான் சுயநலவாதியாக என்னுடையப்படம் நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்குறேன் இன்னும் ஒரு ஆறு மாதம் தள்ளி போனால் வட்டி அதிகரிக்கும் என்று எண்ணி ஏப்ரல் 14 வெளியிடலாம் என்று நினைத்து இருந்தால் ஆனால், இந்த தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இந்த படத்தை தள்ளி போடப்பட்டது. ஏன்னென்றால் பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட கட்டாயம் ஏற்பட்டது. சொன்ன விஷியத்தை செய்துகொண்டு இருக்கிறோம்.

He prayed that I shouldn't contest in RK Nagar Election says Vishal

நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில் தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும். மித்திரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன். பின்பு மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும்.

He prayed that I shouldn't contest in RK Nagar Election says Vishal

இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது. ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமகா இருந்தது. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன.

He prayed that I shouldn't contest in RK Nagar Election says Vishal

என்னுடைய குருநாதர் நான் முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு அப்பாவிற்கு தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார். ஏனா அவர் தான் எனக்கு உக்கம் கொடுத்து ஹீரோவாக உருவாக்கினர் செல்லமே படத்தில். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் கடைசில் சண்டை காட்சி ஒன்று உள்ளது அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம். படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது இவ்வாறு பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios