கேரள மாநிலம் மல்லப்புரம் பகுதியில் நடந்த கொடூரமான செயல் உலகத்தையே உலுக்கியிருக்கிறது. இப்படியொரு பாதகமான செயலை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள்.இரத்த வெறி பிடித்த காட்டேறிகள் கூட இப்படியான செயலை செய்ய யோசித்திருக்கும். யானைக்கு நடந்த கொடூரத்தை நினைத்து வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த பாதகனுக்கு என்ன தண்டனை? இப்படியான செயலை செய்தவன் யார் ? என்கிற கேள்வி தான் முதலில் எழுகின்றது. ஏன் கேரளா அரசு கொடூரனை கைது செய்யவில்லை என்று கோபத்தோடு ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்தது 15 வயதான ஒன்று கருவுற்று இருந்தது. இந்த நிலையில் உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அந்த யானை சென்றுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த மக்களும் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கியுள்ளனர். 

ஆனால் சில விஷமிகள், சமூக விரோதிகள் அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த பழத்தை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற அந்த யானை அங்கும் இங்கும் ஓடி, அருகில் உள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. ஆனால் இறுதியில் அந்த யானை பரிதாபமாக இறந்தது.

இந்த இரக்கமற்ற செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்ற குரல் நாடெங்கும் ஒளித்து வருகின்றது. இந்நிலையில், பிரபல இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், "கடைசியில் அவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு தந்தம் கொண்டு நடுமுதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன், இன்னொரு தந்தம் கொண்டு கீழ்வழியாக மேல்நோக்கி ஏற்றினேன். அப்போது தீர்ந்தபாடில்லை கோபம். ஏனெனில் அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லை.", என்று மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளார். இயக்குனர் லிங்குசாமியை போல் பல லட்சம் லிங்குசாமிகள் கடும் கோபத்தில் கொப்பளித்திருக்கிறார்கள். யார் என்று தெரிந்தால் அவனுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனை உலகத்திற்கே பாடமாக இருக்கும்.