ரஜினி அரசியலுக்கு முழுக்குப்போட்ட அறிவிப்பை கொண்டாடும் வகையில் திமுக தொண்டர்கள் கொண்டாடி வெடி வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். 

வரும் 31ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் கட்சியையும், கொடியையும் அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார் ரஜினிகாந்த். ஆனால், ஹைதராபாத் அண்ணாச்சி படப்பிடிப்புக்கு சென்றபோது  படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

இதனையடுத்து அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வந்த அவர் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வருகை இனி இல்லை என அறிவித்தார். இந்த அறிக்கை திமுகவினரை குஷிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவரது அறிவிப்பை வரவேற்று திமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். 

இதுகுறித்து ட்விட்டரில், ‘’தனது உடல்நிலைனி அரசியலுக்கு திமுக கு ரஜினி மேல அவ்ளோ பயமா..?அன்று நாங்கள் வெடி போட்ட அதே இடத்தில் இன்று திமுகவினர் வெடி போட்டு கொண்டாட்டம்.. வலியுடன் நாங்கள்.. 3ராவது அணி அமைந்து திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது தடைபட்டது

ரஜினி முடிவு அதிமுக பாஜக கூட்டணிக்கு லாபமே. ரஜினி வரவில்லை எனில் நிச்சயம் திமுக வெற்றி பெரும்.ரஜினி வரவில்லை என்பது திமுகவினரை வெடி போட்டு கொண்டாட வைக்கிறது என்றால் எந்த அளவுக்கு பயந்து போயிருப்பாங்கன்னு நினைச்சு பாருங்க. அவன் கட்சி ஜெயித்தால் கூட இவ்வளவு சந்தோஷம் இருந்திருக்காது’’ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.