திமுக ஸ்டாலின் ‘ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்து பயங்கரவாதத்தை பரப்பி மக்களிடம் பதட்டமான சூழ்நிலையை செய்து வருகிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.


 அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது.” திமுகக தலைவர் ஸ்டாலின் கோரி;க்கையை ஏற்க கவனர் மாளிகை ஒன்றும் ;அண்ணா அறிவாலயம் அல்ல’ என்றும் ஸ்டாலின் எப்போதும் இரட்டை வேடம் எடுப்பவர். குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் ஏதாவது அசம்பாவிதம் செய்தால் அதை கண்டிக்க மாட்டார் ஸ்டாலின். இந்து சம்மந்தப்பட்ட நபர்கள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை ஆர்ப்பாட்டமாக போராட்டதாக பேரணியாக ஒரு பிரளமே நடத்துவார்.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தார்கள். தற்போது கன்னியாகுமரியில் எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் சிவகாசியில் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்;ட சம்பவம் திருச்சியில் இந்து முன்னனி தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போதும் ஸ்டாலின் எந்த கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை.


தேர்தலுக்காக இந்த நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக தாம் பெற்றுவிடலாம் என்கிற ஆசையில் இப்படி நடந்து கொள்கிறார். தேர்தல் நேரத்தில் இந்துக்களின் வாக்குகளை பெற தனது குடும்பத்தில் உள்ளவர்களை பட்டை போட வைத்து இந்துக்களை நம்ப வைக்கிறார். தேர்தல் முடிந்த பின் இந்துக்களை திட்டுவார்.
அதிமுக அப்படியல்ல அனைத்து மதத்தினரையும் ஓரே மாதிரியாக மதிக்கிறோம் . பகுத்தறிவு என்ற பெயரில் இநதுக்களை கேலி கிண்டல் செய்து திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்

TBalamurukan