Asianet News TamilAsianet News Tamil

லத்தி சார்ஜ்.. நிலைதடுமாறி கீழே விழுந்த ராகுல்காந்தி.. காயம் ஏற்பட்டதா பார்க்கும் தங்கை பிரியங்கா காந்தி..!

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

Hathras gangrape: Rahul Gandhi arrested
Author
Uttar Pradesh, First Published Oct 1, 2020, 4:40 PM IST

ஹத்ரஸ் சென்ற போது போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்ததாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று புறப்பட்டனர்.

Hathras gangrape: Rahul Gandhi arrested

ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரின் வாகனங்கள் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக பாரிக் சவுக் பகுதியில் வந்தபோது, மாவட்ட அதிகாரிகள், போலீசார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகு பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் நடக்கத் தொடங்கினர்.

Hathras gangrape: Rahul Gandhi arrested

காஜியாபாத்தில் அவர்களை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். ராகுல், பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவும் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: ஹத்ராஸுக்கு செல்லும் வழியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும் போது போலீசார் என்னைத் தள்ளி, லத்தி சார்ஜ் செய்து தரையில் தூக்கி வீசினர்.

Hathras gangrape: Rahul Gandhi arrested

நான் கேட்க விரும்புகிறேன், மோடி ஜி மட்டுமே இந்த நாட்டில் நடக்க வேண்டுமா? ஒரு சாதாரண மனிதன் நடக்க கூடாதா? எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது, எனவே தான் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.  பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் என தெரிவித்தார். தடையை மீறி செல்ல முயன்றதாக கூறி, ராகுல் காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios