பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உடனே இது குறித்து என் கணவரிடம் நான் கேட்டதற்கு, அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்தார் மஞ்சு. அப்போதுதான் என் கணவரிடம், நீங்கள் என்னை தெய்வம் போல பார்த்துக்கொண்டீர்கள், ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்தீர்கள் என்று கேட்டேன். 

ஹரி நாடார் ஒரு பொறுக்கி என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்றும் தனக்கே போன்போட்டு சொன்னவர்தான் காதலி மஞ்சு என ஹரி நாடார் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார். தான் மஞ்சுவிடம் சிக்கி கொண்டிருப்பதாகவும் அதனால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி கனவர் ஹரி நாடார் தன்னை வற்புறுத்தியதாகவும் மனைவி ஷாலினி மனந்திறந்து தெரிவித்துள்ளார்.

பண மோசடி வழக்கில் ஹரி நாடார் கைதாகி ஒறுபுறம் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், வெளியில் அவரது காதலி மஞ்சுவும், மனைவி ஷாலினியும் ஹரி நாடார் யாருக்கு சொந்தம் என கேட்டி யுத்தம் நடத்தி வருகின்றனர். ஹரி நாடாருக்காக ஒருவரை யொருவர் கடுமையாக விமர்சித்தும், ஆபாசமான வார்த்தைகளால் பேசிக் கொள்ளும் ஆடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கழுத்தில் சரம் சரமாக தங்கச் சங்கிலி, ஆடி பென்ஸ் என விதவிதமான கார்கள், எப்போதும் உடன் நான்கைந்து அடியாட்கள், தானும் அரசியல்வாதிதான் என சொல்லிக்கொள்ள ஒரு கட்சியென பந்தாவாக வலம் வந்த பனங்காட்டு படை ஹரி நாடாரின் வண்டவாளத்தை அவரது மனைவியும் காதலியும் மாறிமாறி பேட்டிக் கொடுத்து தண்டவாளம் ஏற்றி வருகின்றனர்.

ஹரிநாடாரின் பயங்கர காதல், கசமுசா விவகாரம் தொடர்பாக அவரது காதலி மஞ்சு கொடுத்துவரும் பேட்டி, தன்னை எப்போதும் ஒழுக்க சீலராக காட்டிக் கொண்ட ஹரி நாடாரின் மானத்தை கப்பல் ஏற்றி வருகிறது. கடந்த சில வாரமாக இந்த களேபரங்கள் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும்ஷாலினி- மஞ்சு மோதல் வெடித்துள்ளது. இருவரும் தொலைபேசியில் மோசமாக ஒருவரையொருவர் வசைபாடும் ஆடியோக்கள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கசிய தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹரி நாடார் தன்னுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை மஞ்சு அவரின் மனைவிக்கே அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது. அதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவரது மனைவி மஞ்சு, தன் கணவரின் நிர்வாண படத்தை மஞ்சு தனக்கே அனுப்பி வைத்தது தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் கூறியிருந்தார்.

அதற்கு பதில் பேட்டி கொடுத்த காதலி மஞ்சு ஹரி நாடாரின் நிர்வாணப்படத்தை அனுப்பியதாக கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுத்ததுடன், ஹரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதை எல்லாம் தட்டிக் கேட்காத மனைவி ஷாலினி தன்னை மட்டும் ஏன் கேட்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். இப்படி இருவரும் மாறி மாறி பேட்டி கொடுத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு யூடியூப் சேனலுக்கு ஹரிநாடார் மனைவி ஷாலினி உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் காதலி மஞ்சு தன் கணவர் ஹரி நாடாரை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார் என்பதை புட்டு புட்டு வைத்துள்ளார். அவர் கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- எனது கணவருக்கும் எனக்கும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை. எங்கள் வாழ்க்கையில் எப்போது மஞ்சு வந்தாரோ அப்போதிலிருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது. 

கடந்த பத்தாண்டு வாழ்க்கையில் இதுவரை ஹரிநாடாருக்கும் எனக்கும் சிறிய சண்டைகூட வந்தது இல்லை. இருவரும் மிகவும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் 2020இல் தான் இந்தப் பிரச்சினை வெடித்தது. மஞ்சு எனக்கு போன் போட்டு " உன் கணவர் ஹரிநாடார் ஒரு பொறுக்கி அவரை விளக்குமாற்றால் அடிக்க வேண்டும். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது" என என்னிடம் கூறினார். இதுகுறித்து எனது கணவரிடம் கேட்டதற்கு பிசினஸ் விஷயமாக அந்தப்பெண் அப்படி பேசுகிறார் என கூறி நழுவி விட்டார். ஆனாலும் எனக்கு மனதுக்கு பொறுக்கவில்லை, பிறகும் அது குறித்து என் கணவரிடம் நான் வலுக்கட்டாயமாக கேட்டேன். அதற்கும் அவர் முறையாக பதில் சொல்ல மறுத்துவிட்டார். மீண்டும் எனக்கு கால் செய்த மஞ்சு நீங்கள் ஹரி நாடாரின் மனைவி என்று எனக்கு தெரியும், ஆனால் மஞ்சு யாரென்று ஹரி நாடாரிடம் கேட்டு பாருங்கள். நான் யார் என்று தெரிந்து கொண்டு ஹரி நாடாரை நீ விவாகரத்து செய்துவிடு என மஞ்சு என்னிடம் கூறினார்.

பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உடனே இது குறித்து என் கணவரிடம் நான் கேட்டதற்கு, அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்தார் மஞ்சு. அப்போதுதான் என் கணவரிடம், நீங்கள் என்னை தெய்வம் போல பார்த்துக்கொண்டீர்கள், ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்தீர்கள் என்று கேட்டேன். அவரும் என்னை மன்னித்து விடு என்று கூறி அழுதார். தவறு நடந்து விட்டது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார், அவரை கைவிட முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். பிறகு நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்கிறீர்களே அந்த குழந்தையை என்னிடம் கொடுங்கள் நானே வளர்க்கிறேன் என்று நான் கூறினேன், ஆனாலும் அவர்கள் இருவரும் என்னை விவாகரத்து செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி என்னை ஹரி நாடாரும், மஞ்சுவும் நிர்ப்பந்தித்து வருகின்றனர் என கூறியுள்ளார். ஹரிநாடார் மனைவு ஷாலினி கொடுத்துள்ள பேட்டி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.