Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய பாஜக.. கதறும் காங்கிரஸ்..!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்த நபர் ஹர்த்திக் படேல். அந்த அடிப்படையில் குஜராத் அரசியலில் தங்களது கரத்தை வலுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அவரை சேர்த்துக்கொண்டது. பின்னர் ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 

hardik patel joins bjp
Author
Gujarat, First Published Jun 2, 2022, 3:32 PM IST

குஜராத்தில்ல படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்த நபர் ஹர்த்திக் படேல். அந்த அடிப்படையில் குஜராத் அரசியலில் தங்களது கரத்தை வலுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அவரை சேர்த்துக்கொண்டது. பின்னர் ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 

hardik patel joins bjp

இந்நிலையில் கட்சியின் தலைமையாலும் ஓரங்கட்டப்பட்ட ஹர்திக் படேல் குஜராத் மாநிலத்தின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர் விரைவில் ஆம் ஆத்மி அல்லது பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் பாஜகவில் இணைவது உறுதியானது. அதற்கு ஏற்றவாறு பாஜகவை அவர் புகழ்ந்து பேசி வந்தார். 

hardik patel joins bjp

இந்நிலையில், இன்று ஹர்திக் படேல் குஜராத் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சி கொடி மற்றும் தொப்பியை அணிவித்து, நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு நடக்க உள்ளது. ஹர்திக் படேலின் வருகை, பாஜகவுக்கு வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

hardik patel joins bjp

பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நான் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சியில் ஒரு தொண்டனாகப் பணியாற்றப் போகிறேன். எனக்கென்று எந்தப் பதவியையும் நான் கட்சி மேலிடத்தில் கேட்கவில்லை. பணி செய்வதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios