handed over Tamilnadu temples to central government - H.Raja

சிவகங்கை

தமிழக இந்துச் சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.300 கோடி அளவுக்கு சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார். பழனி கோயில் மூலவர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கும் ஐம்பொன் சிலையிலும் தங்கம் இல்லை என்று சொல்லப்படுகிறது. 

தமிழக இந்தச் சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் சிலைக் கடத்தல், உண்டியல் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்" என்று அவர் தெரிவித்தார்.