Asianet News TamilAsianet News Tamil

காதித் துறையின் விளம்பர தூதரானார் ஹனன்…. ‘கேரள அரசின் மகள்’ எனவும் நெகிழ்ச்சி… பினராயி விஜயன் வாழ்த்து….

Hanan appointed brand ambasider of kerala khadi
Hanan appointed brand ambasider of kerala khadi
Author
First Published Aug 3, 2018, 10:35 AM IST


கல்லூரியில் படித்துக் கொண்டே மீன் விற்பனை செய்து பெற்றோர்களை காப்பாற்றி வரும் கேரள மாணவி ஹனன், கேரள காதி வாரியத்தின் தற்காலிக விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தாண்டுக்கான ஓணம் - பக்ரீத்பண்டிகைக் காலத்தில் விளம்பரத் தூதராக செயலாற்றுவார்.

எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த மாணவி ஹனன் கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதி நேரமாக சாலையோரத்தில் மீன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். இவரைப் பற்றிய தகவல், ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பரபரப்புச் செய்தியாக மாறியது.

பலர் அவருக்கு உதவ முன்வந்தனர். சிலர்,மீன் விற்பனை என்பது ஹனனின் விளம்பர யுத்தி என்று வசைபாடினர்.ஆனால், கேரளத்தின் பெரும்பாலான மக்கள் ஹனனுக்கு ஆதரவுக்கரம் உயர்த்தினர்.

முதலமைச்சர்  பினராயி விஜயனும், ஹனனின் ஊக்கமான செயலைப் பாராட்டினார். மிரட்டல் பேர் வழிகளிடமிருந்து ஹனனுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், சமூக வலைத்தளங்களில் ஹனனை மோசமாக விமர்சித்த வயநாடு பகுதியைச்சேர்ந்த நூருதீன் ஷேக், குருவாயூரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோர் கேரள போலீசாரால் கைது செய்யப் பட்டனர்.

Hanan appointed brand ambasider of kerala khadi

இந்நிலையில், புதனன்று கேரள தலைமைச் செயலகத்திற்குச் சென்ற மாணவி ஹனன், அங்கு முதலமைச்சர்  பினராயி விஜயனை நேரில் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் முதல்வர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹனன் ‘ஒரு மகள் எப்போதும் தனது பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு ஒன்றை மட்டுமே எதிர் பார்ப்பார்; அந்த வகையில் முதலமைச்சர்  பினராயி விஜயன் எனக்கு ஒரு தந்தையைப் போல் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

Hanan appointed brand ambasider of kerala khadi

நான் கேரள அரசின் மகள்”என நெகிழ்ச்சி அடைந்தார்.அன்றைய தினம் மாலையில், திருவனந்தபுரம் கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம் - பக்ரீத் காதி விற்பனை தொடக்கவிழா நடந்த நிலையில், அதில் முதலமைச்சர்  பினராயி விஜயன், தொழில்துறை அமைச்சர் மொய்தீன், காதி வாரியத் தலைவர் ஷோபனா ஜார்ஜ் உள்ளிட்டோருடன் மாணவி ஹனனும் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற பேஷன்ஷோவில், மாணவி ஹனன் பாரம்பரியகேரள ஆடைகளை உடுத்தி, அழகுறநடந்து வந்தார்.

Hanan appointed brand ambasider of kerala khadi

அவரை அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.முன்னதாக அவருக்கு முதல்வருக்கு அருகே இருக்கை போடப்பட்டுஇருந்தது. ஆனால், ஹனன் அதில் அமருவதற்கு தயங்கவே, பினராயி விஜயனே, ஹனனை நேரடியாக அழைத்து அருகே அமரவைத்தார்.அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஹனனுக்கு, நினைவுப் பரிசு ஒன்றைவழங்கிய பினராயி விஜயன், ஹனன் எப்போதும் போல தொடர்ந்து துணிச் சலும் வாழ்க்கையில் எதிர்நீச்சலும் போட வேண்டும், முன்னேற வேண் டும் என்று வாழ்த்தினார்.

இதனிடையே கேரள காதி வாரியத்தின் தலைவர் ஷோபனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இளைஞர்கள் மத்தியில் ஹனனின் பெயர் நன்கு பிரபலமடைந்து விட்டது; எனவே, இந்த ஆண்டு ஓணம் - பக்ரீத் காதி விற்பனைக்கு விளம்பரத் தூதராக ஹனனை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்; விரைவில் இது தொடர்பாக முடிவு செய் வோம்  என்று அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios