பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது வரை முழுமையாக பள்ளி கல்லூரி திறப்பு காண எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  நடந்து வருகிறது. இதில், மாணவர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் அரையாண்டு தேர்வும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், கோபிச்செட்டிபளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- பள்ளி பாடத்திட்டம் குறைப்பது குறித்து அரசு ஏற்கெனவே நிபுணர் குழு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்ட பிறகு அடுத்த சில தினங்களில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதற்கு ஏற்ப கல்வி தொலைக்காட்சியிலும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் நடத்தப்படும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கருத்துக்களை திரட்டி வருகிறது. மத்திய அரசு 2023 முதல் புதிய கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதனுடைய வாக்கு வங்கி எவ்வளவு உயரும் என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரியும். அது மக்களின் கையில் உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெறும் என்று கூற இப்போது இயலாது என தெரிவித்துள்ளார்.