Asianet News TamilAsianet News Tamil

மோடி பதவி ஏற்பு நாளில் டென்ஷன் ஆக்கிய ஹேக்கர்ஸ்… பாஜக இணையதளத்தில் மாட்டிறைச்சி !!

பாஜக  இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் மோடி பிரதமாராக பதவி ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

hakkers hake bjp web site
Author
Delhi, First Published May 30, 2019, 11:34 PM IST

பிரதமர் மோடியின் தலைமையில் இரண்டாவது முறையாக பா.ஜனதா கூட்டணி அரசு இன்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே  பாஜகசின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாட்டிறைச்சியால் செய்யப்படும் உணவுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.  Shadow_V1P3R என்ற பெயரில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது. 

hakkers hake bjp web site

இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பிரான்ஸ்  பாதுகாப்பு ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய பெயர் டுவிட்டரில் எல்லியாட் அண்டர்சன் என இடம்பெற்றுள்ளது. 

hakkers hake bjp web site

ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து மெனுவையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பா.ஜனதா மேற்கொண்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios