Asianet News TamilAsianet News Tamil

2018ம் ஆண்டுடன் முஸ்லீம்களுக்கான ஹஜ் மானியம் ரத்து!!

haj subsidy cancel said abbas nakvi
haj subsidy cancel said abbas nakvi
Author
First Published Jan 16, 2018, 4:52 PM IST


2018ம் ஆண்டுடன் முஸ்லிம்களுக்கான ஹஜ் மானியத்தை ரத்து செய்வதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

இதுவரை ஹஜ் பயணத்துக்கு மானியமாக பயன்படுத்தப்பட்ட தொகை இனிமேல் பெண் கல்விக்காக செலவிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் புனித யாத்திரைக்காக ஆண்டுதோறும் ரூ.500 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, முன்னாள் அரசு செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான குழு முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான வரைவுக் கொள்கையைத் தயாரித்தது. இது மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை படிப்படியாக ரத்து செய்யுமாறு கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கையின்படியே தற்போது ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios