Asianet News TamilAsianet News Tamil

அந்த டைம்ல அரசியல் துண்டு போட்டு வந்திருந்தா.... பாக்ஸர்களையே ஓடஓட அடிச்சிருப்பாங்க... ஜெயகுமார் பகீர் பேட்டி!

அப்போதுகூட பாக்ஸிங்கில் அரசியல் கலப்பு கிடையாது.  அப்படி அரசியல் கலப்பு இருந்தால் பாக்ஸரிடமே அடிவாங்கிக் கொண்டு ஓடி இருப்பார்கள். 

Had he put a political piece in that time .... to keep the boxers running ... Jayakumar interview
Author
Tamil Nadu, First Published Jul 26, 2021, 11:46 AM IST

திமுக ஆட்சி காலத்தில் வடசென்னையில் பாக்ஸர்களை யானை மேல் வைத்து ஊர்வலம் நடத்தும் அளவிற்கு பாக்ஸிங் கலாச்சாரத்தை ஆதரித்ததை பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்போது திமுக, பாக்ஸர்களோடு நெருக்கமாக இருந்ததாகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் காட்டப்பட்டு இருந்தது. இது அதிமுகவினரை கடுப்பாக்கி இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார்,’’கட்சித்துண்டை போட்டுக்கொண்டு திமுக மட்டும்தான் இந்தக் கலையை வளர்த்ததாகவும், மற்ற கட்சிகள் வளர்க்கவில்லை என்பது போலவும் சார்பட்டா பரம்பரை படத்தில் காட்டி இருக்கிறார்கள்.Had he put a political piece in that time .... to keep the boxers running ... Jayakumar interview

கேட்டால் 1980க்கு முன்னாள் எனச் சொல்கிறார்கள். அப்போதுகூட பாக்ஸிங்கில் அரசியல் கலப்பு கிடையாது.  அப்படி அரசியல் கலப்பு இருந்தால் பாக்ஸரிடமே அடிவாங்கிக் கொண்டு ஓடி இருப்பார்கள்.  அந்த விளையாட்டு பரம்பரை அடிப்படையில் வளர்ந்தது. சார்பட்டா பரம்பரை, சென்னை கேசவலு பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை என பல பரம்பரை உண்டு. இந்த பரம்பரைகளின் அடிப்படையில்தான் சண்டைகள் நடக்கும்.Had he put a political piece in that time .... to keep the boxers running ... Jayakumar interview

ஆனால் இதில் கட்சியை புகுத்தியதுதான் வேடிக்கையாக உள்ளது. பா.ரஞ்சித்தின் முயற்சி நல்ல விஷயம் தான். ஆனால் இதில் அரசியலை கலக்காமல் இருந்திருக்க வேண்டும். மிகப்பிரபலமான பரம்பரை சார்பட்டா பரம்பரைதான். அதனால் அந்த்ப்பெயரை எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சேர்த்திருப்பார். நானும் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் பாக்ஸிங் பயிற்சி பெற்று இருக்கிறேன். ஆனால் கட்சியில் வந்ததால் அந்த விளையாட்டுகளில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் இன்னைக்கு வரைக்கும் அந்த விளையாட்டின் நுணுக்கங்கள் தெரியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios