அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுகவினர் பேசிய பழைய ஃப்ளாஷ்பேக்குகளை பகிர்ந்துள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, ‘’கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய கயவர்கள் கூட்டம் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள 11 அட்மின்களில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள வரும் கைது செய்யப்பட  வேண்டும். 

 

இந்து விரோத திக, திமுக: அண்ணா இந்து விரோதி என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்பதால் பல பொய்கள் பரப்பப் படுகின்றன. கீமாயணம் எழுதியது யார்? அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே’’ எனத் தெரிவித்துள்ளார்.