கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் குமார் பேசினால் அது தவறா? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

தேனியில் இந்து முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார்  காவி துண்டு அணிந்து கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’நான் முதலில் இந்து, பிறகுதான் மற்றதெல்லாம்..’’ எனப் பேசினார். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில் ரவீந்திர நாத் குமாரை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில், ’’கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்.

 

முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தீபாவளி, விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துப் சொல்லாததை விவாதிக்கலாம் ஊடகங்கள் ரவீந்திரநாத் குமார் நாம் இந்துக்கள் என்றதை விவாதிக்கிறது. இதுவும் இந்து விரோதமே’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.