மதத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களை செய்பவர்களே மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் ஹெச். ராஜா அடுத்தடுத்து இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் செய்துகொண்டும்.. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் வேலையில் இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டும்.. 


மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி பெற்றுக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் உதவித்தொகை பெற்றுக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களை செய்துகொண்டும் இருப்பவர்களே மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்...” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.