h raja tweet about p chidambaram

கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சோனியாவை விமர்ச்சித்து பேசினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரசார், மாநிலம் முழுவதும் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் எச்.ராஜா, மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம், சிறைக்கு செல்ல போகிறார் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா கூறியிருப்பதாவது:- 'முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிறைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர் சிறையில் உள்ள வைகோவுக்கு துணையாக இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, தேசத்துக்கு எதிராக பேசும் வழக்கில் வைகோவை தொடர்ந்து விரைவில் சீமானும் சிறைக்கு செல்வார் என்பதைக் குறிக்கும் வகையிலும் பதிவு செய்துள்ளார்.