h raja told congress and pakistan tie up to yield votes in gujarat polls
குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் கை இருப்பதாக, மோடி நேற்று பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளது. இந்நிலையில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள டிவிட்டர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்து...
பாக்கிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் DG சர்தார் அர்ஷத் ரஃபிக் காங்கிரசின் அஹ்மத் படேல் குஜராத்தில் முதல்வராக ஆக்கப்பட்ட வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். காங்கிரஸ் யாருடைய கைப்பாவை என்பதை இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
- இதன்மூலம்,சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ள அகமது படேல் குஜராத் மாநில முதல்வர் ஆக்கப் பட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா. இதனால், காங்கிரஸ் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
நேற்று குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். அவர் இது பற்றிப் பேசுகையில், அண்மையில் மணிசங்கர் அய்யர் தில்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதை அடுத்து தான் மணிசங்கர் அய்யர் என்னை இழிபிறவி என விமர்சித்தார்” என்று கூறியிருந்தார். அவரது குற்றச்சாட்டு நேற்று புயலைக் கிளப்பிய நிலையில், இன்று பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் கருத்துகள் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆனால் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மொஹம்மது ஃபைசல், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் தனத் டிவிட்டரில், “சதித் திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவதை விட உங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுங்கள். தேர்தல் விவாதங்களில் பாகிஸ்தான் பெயரை இழுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தலையீடு உள்ளதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.
